வேர்கள்

999.00

1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனித நூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியதுவம் பெற்றது. தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயற்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.

மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவில் தனது கோர முகத்தை வேறுவிதமாக வெளிபடுத்தியது. காலங்காலமாக அங்கே வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை அங்கிருந்து துரத்திவிட்டு, காட்டு வளங்களை  அழித்து விளைநிலங்களாக்கியது. பாடுபடுவதற்க்கான ஆட்களைத் தேடுவதில் ஒரு புதிய யுத்தியைக் கையாண்டது. உடலுழைப்பில் விஞ்சி நின்ற ஆப்பிரிக்க மக்களைச் சிறைப்பிடித்து, ஆற்றொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கி, விலங்குகளிட்டு, சங்கிலிகளால் பிணைத்து, காட்டு விலங்குகளிலும் கேவலாமக நடத்தி, அடிமைகளாக்கித் தமது பண்ணைகளில் உழைக்கச் செய்தனர்.

ஆப்பிரிக்கர்களை ஆப்பிரிக்க கைக்கூலிகளைக் கொண்டே சிறைப்பிடிப்பதும், அவர்களை அம்மணமாக்கி, ஆண், பெண் வேறுபாடின்றி உறுப்புகளை சோதித்து, சூட்டுகோல்களால் அடையாளக் குறியிட்டு, கப்பலேற்றி, எவ்வித வசதியுமற்ற நிலையில் அவர்களைப் பயணிக்கச் செய்து, அந்த்கக் கொடூரப் பயணத்தில்  கப்பலேறற்ப்பட்டவர்களில் மூன்றிலொரு  பங்கினர் மாண்டதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆடு, மாடுகளைப் போல நடத்தியது. மட்டுமின்றி அடிமை வணிகம் மிகப்பெரியதொரு தொழிலாகவே நடத்தப்பட்டது.

ஐரோபிய வெள்ளையர்கள் ஆக்கிரமித்திருந்த அமெரிக்காவில் ஆப்பிரிக்கக் கறுப்பர்கள் மிக எளிதாக அடையாளம் காணப்பட்டனர். தப்பியோடுவதற்கு வழியே இல்லை. வெள்ளையர்களில் ஏதுமற்ற ஏழைகள் தப்பியோடியவர்களை மீட்டுத்தருகின்ற பணியைத் திறம்பட மேற்கொண்டனர். அவ்வாறாக அங்கே அவனுடைய வழிதோன்றல்களாக ஏழு தலைமுறைகள் உருவாயின.

ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த ஹேலி, எழுத்தாளர் என்பதால், தனது தாய்வழி மூதாதையரைப் பற்றிய செவிவழிச் செய்திகளில் பொதிந்திருந்த உண்மைகளைத் தேட முற்பட்டார். அதன் விளைவாக உருபெற்றது தான் “வேர்கள்” (ஏழு தலைமுறைகள்) எனும் இந்நூல்.

1 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud