வால்காவிலிருந்து கங்கை வரை

250.00

1 in stock

Description

சோவியத் நாட்டின் வால்காவிலிருந்து துவங்கி இந்தியாவின் கங்கைவரை சொல்லும் இந்நூல், இந்தோ-ஐரோப்பியரிலிருந்து காந்திகாலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறும் புகழ்பெற்ற உன்னதப் படைப்பு. இது 8000 ஆண்டுகால வரலாறு மட்டுமல்ல; ஓர் அமர காவியம்; இலட்சிய மகுடம்.

வால்கா நதிக்கரையில் ஆரியர்கள் குலங்களாக வாழ்ந்து, பின்னர் படிப்படியா நகர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளில் சில நூறு தலைமுறைகளில் சிந்துவைத் தாண்டி கங்கை வந்ததை கதைகளாகக் கூறுகிறார் ராகுல். கைபர் போலன் கணவாய் வழியாக ஆரியர் நுழைந்தபோது அவர்களை எதிர்த்து கிமு 2000ல் பெரும் யுத்தம் மூள்கிறது. ஆனால், அவர்களது குதிரைப்படையும் கூரிய உலோக அம்புகளும் வெற்றி பெறுகின்றன. இதையே அவர்கள் தேவாசுர யுத்தம் என்று கூறினார். ஆரியர்கள் பெரும்பாலும் குதிரை மாமிசத்தையும் பசுவின் மாமிசத்தையும் நெருப்பில் வாட்டி உண்டனர் என்கிறது இந்நூலிலுள்ள புருதானன் கதை.

நிஷா, திவா ஆகிய கதைகள் 8000 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தை பெண்களே வழிநடத்தினர்; அன்று தகப்பன் என்றொருவன் கிடையாது; வேட்டையாடுவது முதல் போர் செய்வதிலும் உணவினை அனைவருக்கும் பங்கிட்டுத் தருவதிலும் பெண்ணே ஈடுபட்டாள் என்கின்றன.

மேலும் ஆரியர்கள், இந்தியாவின் லிங்க வழிபாட்டை உடலுறவின் குறியீடாகக் கேலி செய்ததுடன் இந்தியர்களின் விவசாய முறை மற்றும் நகரமைப்பு நாகரீகத்தைக் கண்டு வியந்தனர் என்று ஒரு கதை சொல்கிறது. மேலும் சில கதைகள் காதல், கலைகள், மருத்துவம், நாடகம் அனைத்திலும் நிகழ்ந்த மாற்றங்களை விவரிக்கின்றன. இஸ்லாமிய, பிரிட்டிஷ் ஆட்சிகளின் நன்மை-தீமைகள், சிப்பாய் கலகம், இறுதியாக இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பாசிஸ்ட் படைகளை இந்தியா வீரர்கள் முறியடிப்பதுடன் கதைகள் நிறைவடைகின்றன.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “வால்காவிலிருந்து கங்கை வரை”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud