புயலிலே ஒரு தோணி

295.00

4 in stock

Description

இந்த நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது.

1. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னைக் காட்டிக் கொள்ளாத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இது. வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்டத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவமாகும்.

2. வரலாற்று அடிப்படையிலும் இந்த நாவல் தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப்போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே.

புதிய காலத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றிபெற்ற படைப்பு இது.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “புயலிலே ஒரு தோணி”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud