கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலைகளும்

80.00

8 in stock

Description

காயசண்டிகை
மணிமேகலைக் காப்பியத்தின் பாத்திரமான காயசண்டிகை, தன் உடலின் காமம் கண்ணை மறைக்க பொதிகை மலை முனிவரின் நாவல் கனியை அறியாது மிதித்தவள். அவன் கொடுத்த சாபத்தால் ஆனைப்பசியென்ற தீராப் பதட்டத்தினை உடலின் நோயாகப் பெற்றவள். காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் கொள்வதற்கு முன்பாக அன்பின் ஊற்றாக அங்கு வந்து இறங்கிய மணிமேகலையின் நட்பைப் பெற்றவள்.அவளது சுரப்பியின் முதல் அன்னத்தைப் புசித்தவள். பதட்டம் என்பதைக் களைத்தவள். கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்குத் தென்கிழக்கே கடலின் ஆழத்தில் காலங்காலமாக அமிழ்ந்து கிடக்கும் அந்த எரிமலையை மணிமேகலைக் காப்பியத்தின் காயசண்டிகை என்ற பெயரைக் கொண்டு அழைப்பதே பொருத்தமாக இருக்கும். காயசண்டிகையின் பதட்டம் சுரப்பியின் அன்பால் இல்லாது போனதைப் போல, தமிழக மக்களின் கசடற்ற கல்வி என்ற அன்னத்தால் எவரையும் துன்பப் படுத்தாமல் அது தன் பதட்டத்தைப் போக்கிக்கொள்ளும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் விழுங்கியது. என்றாலும் காஞ்சியில் வாழ்வு தொடர்ந்தது. இதுவே உண்மை.

அணுமின் நிலையங்களின் அமைவிடத்திற்கு அருகாமையில் எரிமலை இருக்கிறதா என்பதையறிய சர்வதேச அணுசக்திக் கழகம் முன்வைக்கும் முதல்கட்ட அடிப்படை அறிவியல் சான்றுகள் அனைத்தின் அடிப்படையிலும் வேற்று நாட்டவரால் 0305-5 என்ற என்னைக் கொண்டு அழைக்கப்பட்டு சொந்த நாட்டு மக்களால் 258 ஆண்டுகளாக அறியப்படாத இந்த எரிமலையை, இனி காயசண்டிகை என்றே அழைப்போம்.
-பூவுலகின் நண்பர்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலைகளும்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud