உம்மத்

390.00

1 in stock

Description

போர்க்கால அவலத்தையும் போருக்குப் பிந்தைய வாழ்க்கையையும் பற்றி ஒரு பெண் எழுதியிருக்கும் முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கக்கூடும். காட்டுத்தீயைக் கையில் அள்ளிக் காட்டியிருக்கிறார் ஸர்மிளா ஸெய்யித் என்று கூறுகிறார் சுகுமாரன்.

“உம்மத்” இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை இது. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர் இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது.

தவக்குல், யோகா, தெய்வானை என்ற மூன்று பெண்முனைகளிலிருந்து நாவல் உருவம் கொள்கிறது. தன்னார்வத் தொண்டாற்றும் தவக்குல் எதிர்கொள்வது மத அதிகாரத்தின் கோபத்தையும் அச்சுறுத்தலையும். போராளியான யோகாவை விரட்டுவது குடும்பத்தினரின் உதாசீனமும் புலனாய்வுப் பிரிவினரின் சந்தேகப் பார்வையும். தெய்வானையை அலைக்கழித்து முன்னாள் போராளி என்ற அடையாளம். இந்த மூறு பெண்களும் அவரவர் துயரத்தை மீறி அடுத்தவருக்கு ஆறுதலாகின்றனர்.

போருக்குப் பிந்தைய காலமும் மனிதர்கள் மீண்டெழுவதற்குப் பாதகமாகவே இருக்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்கிறது உம்மத். இஸ்லாமியாய் அடிப்படைவாதம், தமிழ்த் தேசியவாதம், சிங்கள பேரினவாதம் என்று எல்லா வாதங்களும் முடங்கியிருக்கும் இலங்கைச் சூழலில் இந்த உண்மையை சொல்ல அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் நாவலாசிரியருக்கு இயல்பாகவே இருக்கிறது.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “உம்மத்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud